கண்டுபிடியுங்கள்
இங்கு உள்ள குறிப்புகளை வைத்து விடையைக் கண்டறியுங்கள்!* பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கோளில் இதுவும் ஒன்று.* 2023ஆம் ஆண்டு, இந்தியாவின் அபு மலையின், குருசிகர் ஆய்வகத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. * பூமியிலிருந்து 731 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. * தன்னுடைய நட்சத்திரத்தைச் சுற்றி வர இந்தக் கோள், 7.24 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். அவ்வளவு அருகில் இருக்கிறது.* இந்தக் கோள் வியாழனை விட 13 மடங்கு அதிக நிறை உடையது. * இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1670 கெல்வின். எந்தக் கோள் என்று கண்டுபிடித்தீர்களா?விடைகள்: TOI 4603b