உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. மத்திய அரசுக்குச் சட்ட ஆலோசனை வழங்குவதற்காகச் செயல்படும் சட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், எத்தனையாவது புதிய சட்டக் கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது?அ. 20 ஆ. 22 இ. 15ஈ. 2302. பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் திட்டத்தால், 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை, எவ்வளவு கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்?அ. ரூ.55,000 கோடிஆ. ரூ. 99,000 கோடிஇ. ரூ.80,000 கோடிஈ. ரூ. 15,000 கோடி03. சமூக வலைதளங்களை நிர்வகிப்பதற்காக, இந்தியாவின் எந்த மாநில முதல்வர் அலுவலகம், மாதந்தோறும் ரூ.53 லட்சம் செலவு செய்வதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது?அ. கர்நாடகம்ஆ. தமிழகம்இ. அசாம்ஈ. பீஹார்04. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, நடப்பு நிதியாண்டில், 6.60 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று உலக வங்கி கணித்திருந்த நிலையில், அதைத் தற்போது எத்தனை சதவீதமாக உயர்த்தியுள்ளது?அ. 8ஆ. 6.75இ. 7ஈ. 7.7505. மற்ற கட்சிக்குத் தாவி தகுதி நீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு, ஓய்வூதியத்தை ரத்து செய்யும் மசோதா, எந்த மாநில சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது?அ. தெலங்கானாஆ. மேற்குவங்கம்இ. ஹரியாணாஈ. ஹிமாச்சலபிரதேசம்06. இந்தியாவில், சி.பி.ஐ. விசாரிக்கும் 6,903 ஊழல் வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், இவற்றில் எத்தனை வழக்குகள், 20 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளதாக, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தெரிவித்துள்ளது?அ. 460ஆ. 361இ. 501ஈ. 65307. பாரிஸில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளவர்?அ. ஹர்விந்தர் சிங்ஆ. ஹர்கிஷன் சிங்இ. அனில் ருத்வாஈ. முகேஷ்8. பெங்களூரில் நடந்த, தேசிய தடகளம் 400 மீ. பெண்கள் தடை ஓட்டத்தை, 56.23 வினாடிகளில் கடந்து, 39 ஆண்டுகால பி.டி.உஷாவின் சாதனையை (56.80) முறியடித்துள்ள, தமிழக வீராங்கனை யார்?அ. ப்ரியாஆ. கவிதாஇ. வித்யாஈ. ஸ்வேதாவிடைகள்: 1.ஈ, 2. ஆ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. ஆ, 7. அ, 8. இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !