உள்ளூர் செய்திகள்

டைம் பாஸ்

இரண்டு ஒற்றர்கள் அடுத்தடுத்த நகரங்களில் இருந்தார்கள். இருவரும் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நிலை. அவர்களுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றத்தை நடத்திக் கொடுக்க ஒரு சிப்பந்தி கிடைத்தான். ஆனால் அந்தச் சிப்பந்தியின் மீது ஒற்றர்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை.அனுப்பும் கடிதத்தைப் பிரித்து வாசித்துவிட்டு, மறுபடி முதலில் இருந்ததைப் போல் அவன் ஒட்டிக் கொடுத்து விடுவானோ என்று சந்தேகம். அந்தச் சிப்பந்தி அப்படிச் செய்ய முடியாதபடி அவர்கள் இருவரும் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டார்கள்.அது என்ன ஏற்பாடு? விடைகள்: ஒற்றன் A, தன் கடிதத்தை ஒரு சிறு பெட்டிக்குள் வைத்து அதை ஒரு பூட்டால் பூட்டி விடுவான். சிப்பந்தி அதை எடுத்துச் சென்று ஒற்றன் Bயிடம் கொடுக்க வேண்டும்.ஒற்றன் B முதல் பூட்டை திறக்காமல், அந்தப் பெட்டியில் இன்னொரு பூட்டைப் போடுவான். இரண்டு பூட்டுகளோடு கூடிய அந்தப் பெட்டியை ஒற்றன் Aக்குத் திருப்பி அனுப்புவான்.இப்போது ஒற்றன் A தன் பூட்டைத் திறந்து எடுத்துக்கொண்டு, பெட்டியைத் திரும்பவும் ஒற்றன் Bக்கு அனுப்புவான்.தன் சாவியால் தான் போட்ட பூட்டைத் திறந்து ஒற்றன் B கடிதத்தை எடுத்துக் கொள்வான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !