பறவைகளின் விசித்திர பண்புகள்
உயர்ந்த அன்பிற்கு அன்றில் பறவையைக் குறிப்பிடுவார்கள். மாலைநேரம் வந்துவிட்டால், அது தன் துணையை அழைக்கும் என்பதைக் கபிலர், குறுந்தொகையில் (குறு:177) குறிப்பிடுகிறார்.பழங்காலத்தில், கட்டிலில் ஆண் அன்னமும் பெண் அன்னமும் உதிர்க்கும் தூவிகளைக் கொண்டு, மெத்தை செய்ததை நெடுநல்வாடை (நெடு:124-126) குறிப்பிடுகிறது. கூகை எனப்படும் ஆந்தை, இரவில் நரி ஊளையிடும் ஓசையைக் கேட்டு, தன் இனத்தை அழைக்க குரலெழுப்பும். ஆனால், பறக்கும்போது இறக்கையிலிருந்து ஓசை எழாது. பகலில் பதுங்கிகொண்டு, பல்வகை ஒலிகளை எழுப்பும் இயல்புடையது என்கிறது பதிற்றுப்பத்து (பதி:44) இப்படி தமிழ் இலக்கியங்கள், பறவைகள் பற்றிய நுண்ணிய தகவல்களைப் பதிவு செய்துள்ளன.- ஹரணி