பயஸ் சரித்திர சாதனை
பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி (ஆகஸ்ட் 5 - 21) நடக்க உள்ளது. இதில், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் மிக நீண்ட இழுபறிக்குப் பின், அனுபவ பயஸுடன் சேர்ந்து விளையாட சக இந்திய வீரர் போபண்ணா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ஏழாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்று, சரித்திரச் சாதனை படைக்க இருக்கிறார் பயஸ். பெண்கள் இரட்டையரில் சானியா - தாம்ப்ரே ஜோடியும், கலப்பு இரட்டையரில் சானியா - போபண்ணா ஜோடியும் களம் காணவுள்ளது.