உள்ளூர் செய்திகள்

பொங்குக பொங்கல் எங்கெங்கும்

நிலத்தைக் கொத்திப் பண்படுத்திநெடும்பரப்பாகச் சீர்படுத்திவளத்தைப் பெருக்க நீர்பாய்ச்சிவரப்பை எடுத்துக் கரைகட்டிவண்டி மாட்டை ஏர்பூட்டிவாகாய் மண்ணில் உழவோட்டிஉண்டி கொடுக்கும் உயிர்கொடுக்கும்உழவர் சிறப்பை ஊர்போற்றும் !சோற்றுத் தட்டில் விழுகின்றசோற்றுப் பருக்கை ஒவ்வொன்றும்சேற்றில் இறங்கும் உழவர்களின்சீரிய உழைப்பால் விளைந்தவையாம்.நாற்றைப் பிடுங்கிப் பயிரிட்டுநாட்கணக்காக நீர்பாய்ச்சிவேற்று நினைவே இல்லாமல்வியர்வை பெருகக் களைபறித்துகதிர்கள் முற்றக் காத்திருந்துகதிரை அறுத்துத் தாளடித்துஉதிரும் மணியை உலகோர்க்குஒன்றாய்த் திரட்டித் தருகின்றார்.நாட்டு வளத்தை அறிவதற்குநன்றாய் ஒன்றைக் காட்டென்றால்நாற்று வளத்தைக் காட்டுவதேநல்லறி வாளர் செயலாகும்.விளைச்சல் முடிந்த நன்னாளில்விளைய வைத்த சூரியனைஅழைத்துப் பொங்கல் படையலிட்டுஅன்போடுண்ணும் திருநாளாம்.கூட்டு உழைப்பில் பங்கேற்றுகூடி உழைத்த நன்றிக்குமாட்டுப் பொங்கல் கொண்டாடிமகிழும் நன்னாள் மறுநாளாம்.உலக முதலோன் கதிரவனைஉழைப்பில் திளைத்த உழவர்களைவிளைச்சல் தந்த மண்மகளைவிளைந்து கிடைத்த நெல்மணியைஉழுது களைத்த மாடுகளைஒன்றாய்ப் போற்றிக் கொண்டாடும்பழுதில்லாத திருநாளில்பொங்குக பொங்கல் எங்கெங்கும். -மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !