சிலேடைப் பாடல்
'இம்பர்வான் எல்லை இராமனையே பாடிஎன்கொணர்ந்தாய் பாணா?நீ என்றாள் பாணிவம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தேம் என்றாள்பம்பு சீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்பகடு என்றேன் உழும் என்றாள் பழனம் தன்னைகம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே! 'எழுதியவர் அந்தகக்கவி வீரராகவர்.