உள்ளூர் செய்திகள்

மாய உலகின் ராணி!

ஜே.கே. ரௌலிங்பிரிஸ்டன், இங்கிலாந்துஜூலை 31, 1965லண்டன் செல்வதற்காக, மான்செஸ்டர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். 'ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும்' என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்த கற்பனை, ஒரு கதையின் கருவை அவருக்குள் உருவாக்கியது. ரயில் பயணத்தின்போது, அந்தக் கதையை மெருகேற்றினார். அந்தப் பிரபலமான கதை ஹாரி பாட்டர். அதை எழுதியவர் இங்கிலாந்து ராணியைவிடப் பெரிய கோடீஸ்வரரான ஜே.கே.ரௌலிங்.எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு கிராமத்துப் பள்ளியில் படித்து, ஆசிரியர்கள் விரும்பும் மாணவியாக இருந்தார். சின்ன வயதிலேயே புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கும் ஆர்வம் அவருக்குள் இருந்தது. தனது தங்கைக்கு, நிறைய கதைகளைச் சொல்லி எழுதவும் செய்தார். இளமையில் கடுமையான மனவலியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தார். பலதரப்பட்ட அனுபவங்களின் வழியே, ஏராளமான கதைகள் அவர் மனத்துக்குள் உருவாகின. ஹாரி பாட்டர் நாவலை எழுத ஆரம்பித்தபோது, அவர் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம். எழுத இடம் கிடைக்காமல் பூங்கா, காபி கடை, வீடு, வீதி என, எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ, அங்கெல்லாம் எழுதினார். அவருடைய முதல் கதை முழுக்க பழைய டைப் ரைட்டரில் அடிக்கப்பட்டதுதான். அந்தக் கதையை பல பதிப்பாளர்கள் நிராகரித்த பிறகும், விடாமல் பதிப்பகங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். அப்போது லண்டனின் மிகச்சிறிய பதிப்பு நிறுவனமான, ப்ளூம்ஸ்பரி பதிப்பாசிரியர் நாவலைப் படித்தபோது, அவரது 8 வயது மகளும் ஆர்வத்துடன் படித்தார். குழந்தைகளைக் கவரும் என்று கருதி வெளியிடப்பட்ட ஹாரி பாட்டர் நாவல் வெளிவந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது. உலகத்தின் பணக்காரப் பெண்களில் ஒருவராக உருவெடுத்தார் ரௌலிங். கற்பனைக் கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறினான் ஹாரி பாட்டர். 1995ல் வெளிவந்த முதல் புத்தகமான 'ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' பெரிய வரவேற்பைப் பெற்று, பரிசுகளை வென்றது. 'காப்ளெட் ஆஃப் ஃபயர்' என்ற 4வது பகுதி லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது. 2007ல் வெளிவந்த 7வது பகுதி 'ஹாரிபாட்டர் அன்ட் ஹாப் ப்ளட் பிரின்ஸ்' முதல் நாளிலேயே ஒரு கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இவரது படைப்புகள், உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. திரைப்படங்களாக வெளிவந்தும் வசூல் வேட்டை நடத்தியது. ஹாரி பாட்டரும் ரௌலிங்கும் அடைய முடியாத உச்சத்தை அடைந்தனர். விருதுகள்* பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது* ஸ்மார்டீஸ் புக் பரிசு* ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது* ஆதர் ஆஃப் தி இயர் 2000 * பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !