குயின்டன் முதல் சதம்
பெங்களூருவில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 191/5 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய டில்லி அணிக்கு கேப்டன் குயின்டன் டி காக் மிரட்டினார். இவர் 48 பந்தில் சதம் விளாச, டில்லி அணி 19.1 ஓவரில் 192/3 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், இந்தத் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.