தடை நீக்கம்
சீனா - - அமெரிக்கா இடையில் நீடித்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆம். இரு நாடுகளும் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், அந்த இரு நாடுகளுக்கிடையில் உலக வர்த்தகத்தில் நிலவும் நெருக்கடி ஓரளவு கட்டுப்படும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்க வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன துணைப் பிரதமர் லீயு ஹீ ஆகியோர் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.