மறுமலர்ச்சிக் கவிஞர்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை27.7.1876 - 26.9.1954தேரூர், கன்னியாகுமரி.'ஆங்கிலத்தில் உள்ளதுபோல குழந்தைப் பாடல்கள் தமிழில் இல்லை, ஆகவேதான், பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்' என்று சொன்னவர்.'தங்கையே, பார்! தங்கையே, பார்!சைக்கிள் வண்டி இதுவே பார்!சிங்கார மான வண்டி,சீமையிலே செய்த வண்டி.இரும்பாலே செய்த வண்டிஎங்கெங்கும் ஓடும் வண்டி'என்பது போன்று இவர் எழுதிய பாடல்கள், சிறுவர்களைக் கவர்ந்தன. பக்தி, இலக்கியம், வரலாறு, இயற்கை, வாழ்வியல், சமூகம், தேசியம், வாழ்த்துப் பாக்கள் என, பல்சுவைகளில் எழுதி 20ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞராக இருந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து, முதுகலைப் பட்டம் பெற்றவர். திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பிறகு, பள்ளி ஆசிரியராகவும் கல்லூரி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அறிவியல், வரலாற்று நிகழ்வுகளின் மீது இருந்த ஆர்வம், அவரைக் கல்வெட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடச் செய்தது. ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1922இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளையும் தொகுத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் இவருக்குப் பெரும் பங்குண்டு. சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தை ஆதரித்துக் கவிதைகள் எழுதியதால், 'விடுதலைக் கவிஞர்' என்று புகழப்பட்டார்.தேசியக் கவிஞர், குழந்தைக் கவிஞர், சமுதாயக் கவிஞர், விடுதலைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட 'கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை நினைவாக, இந்திய அரசு 2005இல் தபால் தலை வெளியிட்டு கெளரவித்தது.குறிப்பிடத்தக்க படைப்புகள்* மலரும் மாலையும்* ஆசிய ஜோதி* உமர்கய்யாம் பாடல்கள்* நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்* அழகம்மை ஆசிரிய விருத்தம்* கதர் பிறந்த கதை* குழந்தைச் செல்வம்* தேவியின் கீர்த்தனங்கள்