உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

சொலானம் மெலாஞ்சினா (Solanum melongena) என்பது, உருளைக்கிழங்கின் அறிவியல் பெயராகும்.தவறு. சொலானம் மெலாஞ்சினா என்பது, கத்திரிக்காயின் அறிவியல் பெயராகும். உலக அளவிலும், இந்தியாவிலும் பல்வேறு வகையான கத்திரிக்காய் இனங்கள் உள்ளன.தமிழ்நாட்டிலும் பல வகையான கத்திரிக்காய்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்திரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்திரிக்காய், வேலூரில் முள் கத்திரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்திரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்திரிக்காய், திருச்சியில் அய்யம்பாளையம் கத்திரிக்காய், நெல்லையில் வெள்ளைக் கத்திரிக்காய், தேனி சின்னமனூர் அருகே சிம்ரன் கத்திரிக்காய் என, 8 வகைகள் உள்ளன.இந்தியாவின் 'சூழலியல் தந்தை' (Father of Indian Ecology) ராம்தேவ் மிஸ்ரா ஆவார்.உண்மை. இந்தியாவின் சூழலியல், சுற்றுச்சூழல் துறையில் ராம்தேவ் மிஸ்ராவின் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பிரிவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர் தான், இந்தியாவிலேயே முதன்முதலாக சூழலியலிலுக்கான முதுகலைப் படிப்பைத் தொடங்கினார். அவரது முயற்சிகளுக்காகச் சுற்றுச்சூழல், சூழலியலின் மதிப்புமிக்க சஞ்சய் காந்தி விருது வழங்கப்பட்டது. மேலும் வேர்ல்ட் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (World Academy Of Arts and Science, இந்திய நேஷனல் சயின்ஸ் அகாடமியின் (Indian National science Academy) ஃபெல்லோஷிப்களையும் (fellowship) பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !