உள்ளூர் செய்திகள்

மணக்கும் சோறு

மல்லிகை அரிசி (Jasmine Rice - ஜாஸ்மின் ரைஸ்) * மிக வெண்மையாகவும், நறுமணம் உடையதாகவும் இருக்கும் ஓர் அரிசி வகை. சமைத்த பின்னர் மிக வாசனையாக, மிருதுவாக, லேசான இனிப்புச்சுவையுடனும் அதிக ஒட்டும் தன்மையுடனும் இருக்கும்.* சாதாரண 'ஒரைஸா சடைவா' (Oryza sativa) நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியைவிட நீளம் அதிகமானது.* இந்த அரிசியின் நறுமணம் சேமித்து வைக்கும் சில மாதங்களில் இல்லாமல் போய்விடும். இதனால் ஒவ்வொரு முறையும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியையே நுகர்வோர் விரும்புகிறார்கள்.* சமைக்கும்பொழுது 'அசிட்டைல் பைரோலின்' (Acetyl pyrroline) எனும் வேதிப்பொருள் ஆவியாவதே, நறுமணத்துக்குக் காரணம்.* மல்லிகை அரிசியின் சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic Index) 60-80 ஆக உள்ளது. பாஸ்மதி அரிசியே மிகக்குறைவான GI (59) கொண்டது.* தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது. தெரி்ந்து கொள்வோம்!1. இந்தியாவில் நெல் அதிகம் விளையும் மாநிலம் எது?.......................................2. வண்டு இனங்களில் மிகச் சிறியது எது?.......................................3. நாரை இனத்தில் உயரமானது எது?.......................................4. மணமுள்ள ஓர் அரிசி வகை எது?.......................................விடைகள்1. மேற்கு வங்கம்2. ஸ்கைடோசெல்லா முசாவாசென்சிஸ் (Scydosella musawasensis) அளவு: 0.325 மி.மீ.3. 'சேடில் -பில்டு ஸ்டார்க்' (Saddle- billed Stork), உயரம்: 5 அடி4. பாஸ்மதி- அ.லோகமாதேவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !