உள்ளூர் செய்திகள்

ரோஹித் சர்மா கேப்டன்!

இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் நடக்கும் டி20 தொடரின் முதல் போட்டி நவம்பர் 3இல் டில்லியில் நடக்கிறது. அடுத்த போட்டிகள் ராஜ்கோட் (நவம்பர் 7), நாக்பூரில் (நவம்பர் 10) நடக்கின்றன.இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நடந்தது. வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 அணியில், கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்டது.டி20 அணிரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்ட்யா, சகால், ராகுல் சகார், தீபக் சகார், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.டெஸ்ட் அணிகோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, சகா, ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷாப் பன்ட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !