உள்ளூர் செய்திகள்

சம்பளமாக சாலட்!

முற்காலத்தில் ரோமானியப் போர்வீரர்களுக்கு சம்பளமாக சில சமயங்களில் உப்பு கொடுக்கப்பட்டதாம். 'சால்ட் - சாலரி' (Salt - Salary). சம்பளத்துக்கு இப்படித்தான் Salary என்கிற பெயர் வந்தது. (சில ஹோட்டல்கள்ல பண்டம் ரொம்ப உப்புக் கரிக்குதே… மாஸ்டர்களுக்கு சம்பளம் குடுக்காம, Salt குடுத்திருப்பாங்களோ?)நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் உப்பு கலந்திருக்கிறது. வளர்ந்த ஒரு மனிதரின் உடலில் சுமார் 250 கிராம் உப்பு இருக்கும். அளவுக்கு மீறிய உப்பு ரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.விமான எரிபொருள் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, அதில், நீரின் அம்சம் கலந்திருந்தால், அதை நீக்க உப்பைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் எத்தியோப்பியாவில், உப்புக் கட்டிகள் ரூபாய் நோட்டுகளைப் போலப் பயன்படுத்தப் பட்டன. அதாவது, உப்புக் கட்டிகளைக் கொடுத்து நமக்கு வேண்டிய வேறு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்! எகிப்திய மம்மிகள் (Egyptian mummies) கெட்டுப் போகாமல் இருக்க, உப்பு பயன்பட்டது. (எகிப்திய டாடிகள் சாப்பிடும் கடலை வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் உப்புதானே பயன்பட்டிருக்கும்..?)மூளையின் செயல்பாட்டிலும் நம் உடலில் இருக்கும் உப்புக்கு பங்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !