உள்ளூர் செய்திகள்

சானியா ஜோடி ஹாட்ரிக்

ஜன.29 - மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பெண்கள் இரட்டையர் பைனலில், உலகின் 'நம்பர்-1' ஜோடியான இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா, லூசி ஹடெக்கா ஜோடியை எதிர்கொண்டது. இதில் அசத்திய சானியா - ஹிங்கிஸ் ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, கோப்பையைக் கைப்பற்றியது. 2015- விம்பிள்டன் & யு.எஸ்., 2016 - ஆஸி., ஓபன் ஆகிய வெற்றிகளுக்கு பின் இதை வென்றதன் மூலம் இது ஹாட்ரிக் ஜோடி ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !