சறுக்கினார் சவுரப்
பெல்ஜியத்தில் உள்ள லியுவென் நகரில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் சவுரப் வர்மா, பிரான்ஸின் லூகாஸ் கார்வீ மோதினார்கள். முதல் செட்டை இழந்த சவுரப் வர்மா, 2ஆவது செட்டையும் இழந்தார். மொத்தம் 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சவுரப் வர்மா தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.