உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இந்த ஆண்டின் இளநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், நாடு முழுவதும் தேர்ச்சி பெற்ற 11.45 லட்சம் மாணவர்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?அ. 50,253ஆ. 80,190இ. 78,693ஈ. 1,00,2302. தமிழ் வளர்ச்சித் துறையின், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் நடந்த, தமிழ்க் கலைக்கழகக் கூட்டத்தில், எத்தனை கலைச்சொல்கள் புதிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன?அ. 250ஆ. 220இ. 150ஈ. 2803. லண்டனில் நடந்த, 'மத்திய வங்கி விருது 2023' நிகழ்ச்சியில், உலக அளவிலான மத்திய வங்கிகளில், சிறந்த கவர்னருக்கான விருதைப் பெற்றுள்ளவர்?அ. ரகுராம் ராஜன்ஆ. உர்ஜித் படேல்இ. சக்திகாந்ததாஸ்ஈ. சுப்பாராவ்4. 'இந்தியாவில் பணவீக்கத்தைவிட, நாட்டின் வளர்ச்சிக்கே முன்னுரிமை அளித்தோம். பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை மெதுவாகவே இருக்கும்' என, சமீபத்தில் பேசியவர்?அ. நரேந்திர மோடிஆ. அமித்ஷாஇ. ராஜ்நாத் சிங்ஈ. சக்திகாந்ததாஸ்5. அலுவலகப் பணிக்கு இடையே, எத்தகைய உடற்பயிற்சி செய்வதற்கான இடைவேளை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது?அ. நடைஆ. யோகாஇ. ஓட்டம்ஈ. ஜூம்பா6. அண்ணா பல்கலையின் இஞ்சினியரிங் கல்லூரிகளில், அடுத்த ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ. எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் உள்ளிட்ட படிப்புகளில், எந்த மொழிவழி படிப்புகள் தொடங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது?அ. தமிழ்ஆ. ஹிந்திஇ. சமஸ்கிருதம்ஈ. மலையாளம்7. ஜப்பானில் நடந்த, ஜூனியர் பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், எந்த அணி முதன்முறையாக, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது?அ. பாகிஸ்தான்ஆ. ஆஸ்திரேலியாஇ. இந்தியாஈ. இலங்கை8. நாட்டிலேயே, காற்றாலை மின் உற்பத்தித் திறனில், தமிழகம் 10,124 மெகாவாட் உடன் எத்தனையாவது இடத்தில் உள்ளது?அ. முதல்ஆ. இரண்டுஇ. மூன்றுஈ. நான்குவிடைகள்: 1. இ, 2. ஆ, 3. இ, 4. ஈ, 5. ஆ, 6. அ, 7. இ. 8. ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !