உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. அரசு பள்ளிகளில் படித்து, 'ராக்கெட் சயின்ஸ்' என்ற திட்டத்தில் பயிற்சி பெற்ற எத்தனை மாணவர்கள், ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட, மாஸ்கோ செல்ல உள்ளனர்?அ. 100ஆ. 40இ. 75ஈ. 802. பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்து தங்கள் நாடு விடுதலை பெற, ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா உதவ வேண்டும் என, எந்த நாட்டின் பிரதமரான நெய்லா குவாட்ரி வலியுறுத்தியுள்ளார்?அ. பலுசிஸ்தான்ஆ. ஆப்கானிஸ்தான்இ. தஜிகிஸ்தான்ஈ. டர்க்மெனிஸ்தான்3. இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வின், 'பி.எஸ்.எல்.வி. 4 - 56' ராக்கெட் வாயிலாக, எத்தனை சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள், சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டன?அ. ஐந்துஆ. பத்துஇ. மூன்றுஈ. ஏழு4. சென்னையை அடுத்த வல்லம் வடகால் பகுதியில், 50 கோடி ரூபாயில், ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்) பரிசோதனை செய்வதற்கான மையம் அமைக்க, தமிழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?அ. நிதி அமைச்சகம்ஆ. ராணுவ அமைச்சகம்இ. போக்குவரத்து அமைச்சகம்ஈ. சுகாதார அமைச்சகம்5. கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான யாருடைய மகன் அனில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்?அ. ஏ.கே.அந்தோணிஆ. உம்மன் சாண்டிஇ. அச்சுதானந்தன்ஈ. பினராயி விஜயன்6. இந்தியா முழுவதும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில், எத்தனை புலிகள் இறந்துள்ளன?அ. 55ஆ. 63இ. 80ஈ. 737. காலனித்துவ மரபுகளை ஒழிக்கும் முயற்சியாக, இந்தியக் கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் கையில் எந்தப் பொருளை வைத்திருக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது?அ. கைத்தடிஆ. துப்பாக்கிஇ. வாள்ஈ. கேடயம்8. ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்ததற்கு, ஐ.பி.எல். தொடரில் தனது செயல்பாடே காரணம் என சமீபத்தில் கூறியவர்?அ. ராகுல் திரிபாதிஆ. திலக் வர்மாஇ. ரிங்கு சிங்ஈ. ஜிதேஷ் சர்மாவிடைகள்: 1. இ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. அ, 6. ஈ, 7. அ, 8. இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !