நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்கு வந்த குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் எத்தனை மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சகம், மக்களவையில் சமீபத்தில் தாக்கல் செய்தது?அ. ஒன்றுஆ. இரண்டுஇ. மூன்றுஈ. நான்கு2. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில், எந்த மாநிலத்தின் மாடலைப் பின்பற்றுமாறு, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மாநகராட்சிகளுக்கு, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது?அ. புதுச்சேரிஆ. அஸ்ஸாம்இ. குஜராத்ஈ. பீஹார்3. 'சந்திரயான் 3' விண்கலம், வரும் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ரஷ்யாவின் எந்தப் பெயர் கொண்ட விண்கலம், சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது?அ. லாவா - 23ஆ. மிஷன் - 23இ. ஸ்பேஸ் - 23ஈ. லூனா - 254. ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள எந்த நாட்டில், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதை அடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி, இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது?அ. நைஜர்ஆ. அர்மேனியாஇ. கொலம்பியாஈ. நைஜீரியா5. மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஹிந்தியில் மருத்துவப் படிப்பு நடைமுறையில் உள்ள நிலையில், வேறு எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும், விரைவில் ஹிந்தியில் மருத்துவப் படிப்பை அறிமுகப்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது?அ. தெலங்கானாஆ. உத்தரகண்ட்இ. சத்தீஸ்கர்ஈ. மேற்குவங்கம்6. மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேறும் எந்த வகையான வாயு, மழை மேகங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது?அ. கார்பன் டை ஆக்ஸைடுஆ. கார்பன் மோனாக்ஸைடுஇ. சல்ஃபர் ஆக்ஸைடுஈ. நியான் ஆக்ஸைடு7. சென்னைத் துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில், எத்தனை கன்டெய்னர்கள் கொண்டு செல்லும் புதிய சரக்குக் கப்பல் சேவை தொடங்க உள்ளது?அ. 200ஆ. 400இ. 500ஈ. 3008. சமூகவலைத் தளமான இன்ஸ்டாகிராமில், அதிக வருமானம் பெறும் விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்?அ. விராட் கோலிஆ. மகேந்திரசிங் தோனிஇ. ரோஹித் சர்மாஈ. ரவீந்திர ஜடேஜாவிடைகள் 1. இ, 2. அ, 3. ஈ, 4. அ, 5. ஆ, 6. இ, 7. ஈ, 8. அ.