நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதி களுக்கு, சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது?அ. நான்குஆ. மூன்றுஇ. ஆறுஈ. ஐந்து02. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு, எந்த வழி போக்குவரத்து புதிதாகத் தொடங்க உள்ளது?அ. கப்பல்ஆ. பேருந்துஇ. ரயில்ஈ. விமானம்03. தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேருக்கு, சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில், தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர்?அ. மூன்றுஆ. இரண்டுஇ. ஐந்துஈ. எட்டு04. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எத்தனையாவது ஆண்டு பட்டமளிப்புவிழா சமீபத்தில்நடந்தது?அ. 45ஆ. 42இ. 43ஈ. 4405. புதுடில்லியில் நடந்த, 'ஜி--20' மாநாட்டுக்கான விருந்து அழைப்பிதழில்,'தி பிரசிடென்ட் ஆப் இந்தியா' என்பதில், 'இந்தியா' என்ற வார்த்தைக்குப் பதிலாக, என்னவென்று குறிப்பிடப்பட்டு இருந்தது?அ. பாரத்ஆ. தேஷ்இ. இந்துஸ்தான்ஈ. பாரதம்06. மஹாராஷ்டிரத்தின் புனேவில் உள்ள, இந்தியத் திரைப்படக் கல்லூரியின் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நடிகர் யார்?அ. அபிஷேக் பச்சன்ஆ. சல்மான்கான்இ. மாதவன்ஈ. ஷாருக்கான்07. நடப்பாண்டு ஜூன் காலாண்டில், உலக அளவில் மொபைல் சந்தாக்களின் எண்ணிக்கை,830 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் எந்த நாடு, 70 லட்சம் சந்தாக்களுடன் முதலிடத்தில் உள்ளது?அ. இந்தியாஆ. அமெரிக்காஇ. சீனாஈ. ஜப்பான்08. தாய்லாந்தில் நடந்த கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில், எந்த அணியிடம் தோல்வி அடைந்தது?அ. பிரேசில்ஆ. ஸ்பெயின்இ. ஈராக்ஈ. ஜெர்மனிவிடைகள்: 1. இ, 2. அ, 3. ஆ, 4. இ, 5. அ, 6. இ, 7. அ, 8. இ.