நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.01. இந்திய மருந்துத் துறையில், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த, எவ்வளவு கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா சமீபத்தில் அறிமுகப் படுத்தினார்?அ. ரூ.10,000 கோடிஆ. ரூ.3,000 கோடிஇ. ரூ.5,000 கோடிஈ. ரூ.6,000 கோடி02. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிதாக, இரு ஹைட்ரஜன் பேருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் பேருந்துகளை, எந்த நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது?அ. மகேந்திராஆ. டாடா மோட்டார்ஸ்இ. ஃபோர்ஸ் மோட்டார்ஸ்ஈ. இந்துஸ்தான் மோட்டார்ஸ்03. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமமாக, தமிழகத்தில் உள்ள 'உல்லாடா' என்ற கிராமத்தை, மத்திய சுற்றுலா அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இது, எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?அ. நீலகிரிஆ. கிருஷ்ணகிரிஇ. கன்னியாகுமரிஈ. தர்மபுரி04. தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஏற்கெனவே ஐந்து பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் எத்தனை ஓதுவார்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்?அ. இரண்டுஆ. மூன்றுஇ. ஐந்துஈ. நான்கு05. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, எந்தக் கட்சி சமீபத்தில் அறிவித்தது?அ. தி.மு.க.ஆ. பகுஜன் சமாஜ்இ. கம்யூனிஸ்ட்ஈ. அ.தி.மு.க.06. கம்ப்யூட்டர் கேமிங், காமிக்ஸ் கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை, எந்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது?அ. கலைஆ. மருத்துவம்இ. பொறியியல்ஈ. இசை07. சென்னை - திருநெல்வேலி உட்பட, 11 மாநிலங்களுக்கு இடையேயான எத்தனை, 'வந்தே பாரத்' ரயில்களின் சேவை, சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?அ. பதினொன்றுஆ. ஒன்பதுஇ. பத்துஈ. எட்டு08. ஆசிய விளையாட்டின், 19ஆவது சீசன் போட்டிகள், எந்த நாட்டில் உள்ள ஹாங்சு என்ற பகுதியில் நடந்து வருகின்றன?அ. சீனாஆ. ஜப்பான்இ. தாய்லாந்துஈ. பாங்காக்விடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. இ, 7. ஆ, 8. அ.