உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் இந்திய ஜனாதிபதியான யாரின் உருவச் சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்?அ. ராம்நாத் கோவிந்த்ஆ. அப்துல் கலாம்இ. பிரதீபா பாட்டீல்ஈ. பிரணாப் முகர்ஜி2. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், எந்தத் திட்டத்தின் முதற்கட்ட சோதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் சமீபத்தில் நடந்தது?அ. சந்திரயான்ஆ. ஆதித்யாஇ. ஆஸ்ட்ரோசாட்ஈ. ககன்யான்3. தமிழகத்தில், அ.தி.மு.க. கட்சியின் எத்தனையாவது ஆண்டு தொடக்க விழா, கட்சியினரால் சமீபத்தில் கொண்டாடப்பட்டது?அ. 52 ஆ. 55இ. 50ஈ. 584. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் எத்தனை இடங்கள், கடுமையாகப் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது?அ. 3,002ஆ. 2,500இ. 4,099ஈ. 3,7705. இந்தியாவின் எந்த இரு மாநிலங்களுக்கு, சமீபத்தில் புதிய கவர்னர்களை நியமித்து, ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்?அ. ஒடிசா, திரிபுராஆ. கர்நாடகம், தெலங்கானாஇ. தமிழ்நாடு, கேரளம்ஈ. மணிப்பூர், மஹாராஷ்டிரம்6. சர்வதேச ஒலிம்பிக் போட்டியில், 128 ஆண்டுகளுக்குப்பின், எந்தப் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளது?அ. மல்யுத்தம்ஆ. கிரிக்கெட்இ. செபக் டக்ராஈ. கோல்ஃப்7. நியூசிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில், அந்த நாட்டின் தேசியக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?அ. கிறிஸ் ஹிப்கின்ஸ்ஆ. கிரான்ட் ராபர்ட்ஸ்இ. கிறிஸ்டோபர் லக்சன்ஈ. வின்ஸ்டன் பீட்டர்ஸ்8. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான எந்த அணியை, 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்தது?அ. இங்கிலாந்துஆ. ஆஸ்திரேலியாஇ. நியூசிலாந்துஈ. இலங்கைவிடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. அ, 4. ஈ, 5. அ, 6. ஆ, 7. இ, 8. அ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !