உள்ளூர் செய்திகள்

மூதறிஞர் ராஜாஜி

வாழ்ந்த காலம்: 1878 - 1972பிறந்த ஊர்: கிருஷ்ணகிரி, தொரப்பள்ளி.சாதனை: அரசியலில் இருந்து கொண்டே, இலக்கியத்திற்கும் தொண்டாற்றியவர்.விருது: 1954ல் பாரத ரத்னா சி.ராஜகோபாலாச்சாரி என்பது ராஜாஜியின் இயற்பெயர். விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். 1900ம் ஆண்டிலேயே, ஒரு வழக்குக்கு கட்டணமாக, 1000 ரூபாய் வாங்கிய வெற்றிகரமான வழக்கறிஞர். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிறகு, விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடினார். 1930ல் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடத்தி, சிறை சென்றார்.1937ல் அப்போதைய மதராஸ் மாகாண பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்று, மாகாணம் முழுவதும், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். 1947 - 1948ல் மேற்கு வங்க ஆளுநராகவும், 1948 - 1950 வரை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியுள்ளார். ராமாயணம், மகாபாரதத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.நினைவுச் சின்னங்கள்: நினைவு இல்லம் - வாழ்ந்த வீடு, தொரப்பள்ளி.நினைவு மண்டபம் - சென்னை, கிண்டி.ராஜாஜி அரங்கம் - சென்னை, ஓமந்தூரார் தோட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !