உள்ளூர் செய்திகள்

முள்ளெலியிடம் கற்றுக்கொண்ட அறிவியல்!

செல்லப் பிராணிகளை விரும்பி வளர்ப்பவர்களுக்கு, வெவ்வேறு விதமான கதைகள் உண்டு. சென்னை மண்ணடியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞர், உயிரியல் பாடத்தில் ஏற்பட்ட ஈர்ப்பால், முள்ளெலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். கிரணைச் சந்தித்துப் பேசியபோது... செல்லப் பிராணிகள் வளர்க்கும் ஆசை வந்தது எப்படி?எங்க அப்பாதான் இந்த விஷயத்துல முன்மாதிரி. அவர் 100 முதல் -150 வரையிலான புறாக்களை வளர்த்தார். அதனால, நான் பெட் வாங்கணும்னு ஆசைப்பட்டதும், வீட்டுல யாருமே எதிர்ப்பு காட்டல. உங்க கையில இருக்கிற பெட் பிராணியின் பெயர் என்ன? இதோட பெயர் முள்ளெலி. ஆங்கிலத்துல ஹெட்ஜ்ஹாக் (hedgehog-) ன்னு சொல்லுவாங்க. நம்ம ஊருல இருக்கிற முள்ளெலி இருக்கு. ஆனா அதை செல்லப் பிராணியா வளர்க்கறது சட்டவிரோதம். இது ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. நம்ம ஊரு முள்ளெலியைவிட அளவில் பாதிதான் இருக்கும். இதைச் செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காகவே இனப்பெருக்கம் செய்யறாங்க. இப்போ நம்ம ஊரிலும் கிடைக்கும். எலியை எப்படி செல்லப் பிராணியா வளர்க்கறீங்க?நீங்க ஒரு மணி நேரம் இங்க இருந்தீங்கன்னா இவனைவிட்டு நிச்சயமா போக மாட்டீங்க. அவனோட முகம் வளைஞ்சு இருக்கறதால, எப்போதும் சிரிச்சுட்டு இருக்கிற மாதிரியே இருக்கும். அதான் இவன்கிட்ட எனக்கு பிடிச்சது. இவனுக்கு தன்னை கையில தூக்கி வச்சுக்கறது ரொம்ப பிடிக்கும். கடிக்க மாட்டான், நம்ம கைக்குள்ள அடக்கமாக இருப்பான். இந்தாங்க கையில வச்சுப்பாருங்க…அட, என்னோட கையில வந்ததும் ஏன் இப்படி பந்து மாதிரி சுருங்கிட்டான்?நீங்க கேட்டீங்க இல்ல, இந்த எலில என்ன சிறப்பு இருக்குன்னு. இதோ இதுதான். ரொம்ப பயந்துட்டா, இப்படி பந்து மாதிரி தன்னை சுருக்கிக்கிறது இவனோட இயல்பு. உங்ககிட்ட பழகிட்டா, நல்லா விளையாடுவான். ஆனா அப்பப்ப இந்த மாதிரி சேட்டை பண்ணுவான். இவன், பந்து மாதிரி சுருங்கி விளையாடறது கண்ணாமூச்சி ஆட்டம் மாதிரி இருக்கும். என்ன உணவு கொடுக்கறீங்க?இவனுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன், முட்டைக்கரு கொடுப்போம். பொதுவாக பூனைக்கு கடைகளில் விற்கும் உணவுகளையே சாப்பிடக் கொடுக்கலாம். உங்க வீட்டுல இவனுக்காக ஏதாச்சும் மாற்றம் செஞ்சு இருக்கீங்களா?செல்லப் பிராணிகளில் முள்ளெலியைப் பராமரிக்கறது ரொம்ப ஈஸி. மரத்தால ஒரு அலமாரி தயாரிச்சு, சமதளமான தரை அமைச்சோம். 5 சதுரஅடியில இவனுக்கான இடம் தயார் பண்ணி இருக்கேன். அதுல நல்லா சுத்தி விளையாடுவான். இவனோட இடத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி பராமரிக்கிறோம். முள்ளெலி சுறுசுறுப்பாக இருக்கும் நேரம்?மாலை 6 மணிக்கு மேல், சுறுசுறுப்பாக இருக்கும். நம்மோடு விளையாடும். அதே மாதிரி, தனியாக இருக்க வேண்டும் என நினைக்கும்போது, அவனே அதை தன் உடல் மூலமா சொல்லுவான். இவனோட விளையாடுறதுனால எனக்கு கவனச்சிதறல் குறைஞ்சிருக்கு. பயாலஜி படிச்சிருந்தாலும், பிராக்டிக்கலாக நிறைய விஷயங்களை இப்போதுதான் புரிஞ்சுக்கிட்டேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !