உள்ளூர் செய்திகள்

தழும்பில்லாமல் காயம் ஆறும் விஞ்ஞானிகள் அசத்தல்

ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் புண் ஆறும்போது தழும்பாக மாறும். குறிப்பாக பெரிய காயங்கள் என்றால், வடு அதிகமாகத் தெரியும். அழகைக் கெடுக்கும் தழும்பை குறைக்க, மருத்துவர்கள் பல்வேறு முறைகளை கையாண்டாலும், அவை குறையுள்ளதாகவும், அதிக செலவுள்ளதாகவும் உள்ளன. இந்நிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த போஹாங் பல்கலைக்கழக ஆய்வுக்குழு, சிப்பியின் பசையை பயன்படுத்தி, ஏறக்குறைய தழும்பில்லாமல் காயம் ஆற்றும் முறையை கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது, 'பெரும் அலைகளுக்கு எதிராக தாக்குப்பிடித்து, பாறைகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சிப்பிகளின் பசை தொழில்நுட்பம் ஆச்சரியத்துக்குரியது. அதை கொலாஜனுடன் சேர்த்து, எலிகளிடம் சோதனை செய்தோம். இதன்மூலம் 8 மில்லி மீட்டர் அகலம் கொண்ட காயம் விரைவாகவும் தழும்பின்றியும் குணமாக்கப்பட்டுள்ளது. விரைவில் பிற சோதனைகள் வெற்றியடைந்து, மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !