உள்ளூர் செய்திகள்

குழந்தைகளின் உரிமைக்கு தனி நீதிமன்றங்கள்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் விழாவில் கலந்துகொண்டு பேசிய, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, 'உலகின் மிக மோசமான குற்றம் என்பது, குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குவதே, இது குழந்தைகளின் கனவுகளைப் பறிக்கும் கொடூரமான செயல்' என்றார். நம் நாட்டில் குழந்தைகள் மீதான வன்முறைச் செயல்கள் அதிகரிப்பது குறித்துக் கவலை தெரிவித்ததோடு, அத்தகைய வழக்குகளில் நீதி வழங்க ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவலை தெரிவித்தார். தாமதங்களைக் குறைக்க மாவட்டங்கள் தோறும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், காவலர்கள் குழந்தைகளிடம் நட்புணர்வுடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். குழந்தைகள் முன்னேற்றச் செயற்பாடுகளுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !