உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஆகஸ்ட் 2, 1876 - பிங்கலி வெங்கையா பிறந்த நாள்இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர். வைரச் சுரங்கம் தோண்டுவதில் சாதனை படைத்ததால் 'வைரம் வெங்கையா' என்றும் அழைக்கப்பட்டார். தென்-ஆப்பிரிக்க போரில் இவர் இந்திய- பிரித்தானிய படையில் பணியாற்றினார். காந்திஜியின் அறிவுறுத்தலால் இந்தியக் கொடியை உருவாக்கினார்.ஆகஸ்ட் 4, 1961 - பராக் ஒபாமா பிறந்த நாள்அமெரிக்காவின் 44வது அதிபர். ஜனவரி 2009 முதல் ஜனவரி 2017 வரை அதிபராக இருந்தார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது அதிபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமைதிக்கான நோபல் பரிசை 2009ல் பெற்றார்.ஆகஸ்ட் 5, 1930 - நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்நிலவில் முதன்முறையாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர். வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, பல்கலைகழகப் பேராசிரியர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்று நூல் 'ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்' 2005ல் வெளிவந்தது.ஆகஸ்ட் 5, 1905 - ராஜா சர் முத்தையா பிறந்த நாள்சென்னை மேயர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்தார். காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936ல் மருத்துவம், சுங்கத்துறை அமைச்சராக இருந்தார்.ஆகஸ்ட் 6, 1945 - ஹிரோஷிமா நாள்இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஹிரோஷிமா நகரத்தின்மீது லிட்டில் பாய் என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இதை நினைவுகூரவும், அணுகுண்டின் அபாயத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6, 1881 - அலெக்சாண்டர் ஃபிளெமிங் பிறந்த நாள்நோய் எதிர்ப்பு மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்தார். பல அரிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருந்து இன்றும் மக்களைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது பென்சிலின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !