தேதி சொல்லும் சேதி
அக்டோபர் 16, 1945 - உலக உணவு நாள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் சரியாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ஐ,நா, சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்னை, பசி, வறுமைக்கு எதிராகப் போராடுவதே இந்த நாளின் நோக்கம். அக்டோபர் 17, 1992 - உலக வறுமை ஒழிப்பு நாள்குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை மதிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டில் அடிப்படை வாழ்க்கைத் தரம் இல்லாத மக்களே வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்கிறார்கள். வறுமை, ஏழ்மை நிலையை ஒழிக்க இந்த நாள் ஐ.நா. சபையால் கடைப்பிடிக்கப்படுகிறது.அக்டோபர் 18, 1956 - மார்டினா நவரத்திலோவா பிறந்த நாள்மூன்று வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கிய செகோஸ்லோவேக்கியா வீராங்கனை. 18 தனிநபர், 40 இரட்டையர் 'கிராண்ட் ஸ்லாம்' பட்டங்களுடன் விம்பிள்டனை 9 தடவை வென்றிருக்கிறார்.அக்டோபர் 19, 1888 - நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள்சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் அறிஞர். எளிய சொற்களால் தேசபக்திப் பாடல்கள் பாடி, சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தினார். 'தேசியக்கவி' எனப் போற்றப்பட்டு, தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். 1971ல் பத்மபூஷண் விருது பெற்றார்.அக்டோபர் 21, 1833 - ஆல்ஃபிரட் நோபல் பிறந்த நாள்அறிவியலாளர், டைனமைட் வெடி பொருளைக் கண்டுபிடித்தார். உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கினார். இவரது நினைவாக, ஒரு தனிமத்துக்கு 'நோபலியம்' எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது.அக்டோபர் 21 - உலக அயோடின் குறைபாடு நாள்அயோடின் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். இந்தப் பற்றாக்குறை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.