தேதி சொல்லும் சேதி
மார்ச் 6, 1937 - வேலன்டினா டெரெஷ்கோவா பிறந்தநாள்விண்வெளியில் பறந்த முதல் ரஷ்ய பெண் என்ற பெருமை பெற்றார். 3 நாட்களில் 48 முறை பூமியைச் சுற்றி வந்தார். சோவியத் யூனியனின் 'ஆர்டர் ஆஃப் லெனின்' விருது பெற்றிருக்கிறார்.மார்ச் 7, 1765 - ஜோசப் நைஸ்போர் நிப்ஸ் பிறந்தநாள்பிரான்ஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர். நிரந்தரமாக உருவம் பதியும் கேமராவைக் கண்டுபிடித்தார். புகைப்படக் கலையை உலகிற்கு வழங்கிய லூயிஸ் டாகுரே என்பவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார்.மார்ச் 8, 1946 - அனைத்துலக மகளிர் நாள்தாய் நாடு, தாய் மொழி என பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அதுபோல பெண்களுக்கு சம உரிமையுடன் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். பெண்களைப் போற்ற இந்த நாள் கொண்டாடப்படுகிறது.மார்ச் 9, 1454 - அமெரிக்கோ வெஸ்புகி பிறந்தநாள்இத்தாலி கடல் பயணி. கடற்பயணத்தில் தென் அமெரிக்கா உட்பட பல புதிய இடங்களைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். ஆகவே, இவரது பெயர் அமெரிக்காவுக்குச் சூட்டப்பட்டது. மார்ச் 9, 1934 - யூரி ககாரின் பிறந்தநாள்விண்வெளியில் பயணித்து, விண்ணில் வலம்வந்த முதல் விண்வெளி வீரர். வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, 108 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார். ரஷ்யாவில் பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்ச் 10, 1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள்வாழ்நாள் முழுதும் தமிழர், தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னிறுத்தி வாழ்ந்தார். 'தமிழ்த் தேசியத் தந்தை' என்று தமிழர்களால் போற்றப்படுகிறார். மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று குரல் கொடுத்தார்.