உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஜூலை 11, 1989 - உலக மக்கள்தொகை நாள் மக்கள் தொகை தொடர்பான பிரச்னைகள், அவசரத் தேவைகளுக்குத் தீர்வுகாண ஐ.நா.சபையால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.ஜூலை 12, 1854 - ஜார்ஜ் ஈஸ்ட்மேன் பிறந்த நாள்கோடாக் கம்பெனியின் நிறுவனர். புகைப்படக்கலையை எல்லோரும் பயன்படுத்தக் காரணமான ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தார். 1900களில் 1 டாலர் விலை கேமராவை அறிமுகம் செய்தார்.ஜூலை 12, 1904 - பாப்லோ நெருடா பிறந்த நாள்20ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. 'பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்' என்ற இவரது கவிதை பிரபலமானது.ஜூலை 14, 1945 - ஷிவ் நாடார் பிறந்த நாள்தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான ஹெ.சி.எல். (HCL)இன் தலைமைச் செயல் அதிகாரி. 2008இல் இந்திய அரசு இவருக்கு 'பத்ம பூஷண்' விருது அளித்துக் கெளரவித்தது.ஜூலை 15, 1876 - மறைமலை அடிகள் பிறந்த நாள்தமிழறிஞர். தமிழ்ப் பற்றால், 'வேதாச்சலம்' என்ற பெயரை 'மறைமலை' என்று மாற்றிக் கொண்டார். இலக்கியம், மருத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஜூலை 15, 1903 - கு.காமராஜர் பிறந்த நாள்முன்னாள் தமிழக முதல்வர். மாணவ, மாணவியருக்கு, இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். இந்திய அரசு இவருக்கு 1976இல் 'பாரத ரத்னா' விருது வழங்கிக் கௌரவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !