தேதி சொல்லும் சேதி
அக்டோபர் 1, 1975 - தேசிய இரத்த தான நாள்உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க இரத்தம் அவசியம். இரத்த தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இரத்த தானம் செய்வோரைச் சிறப்பிக்கவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.அக்டோபர் 2, 1908 - டி.வி. ராமசுப்பையர் பிறந்த நாள்'தினமலர்' நாளிதழின் நிறுவனர். சமூக சேவகர், சீர்திருத்தவாதி. 'தேசிய மாமணி' உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றவர். இவரது நினைவு அஞ்சல் தலையை இந்திய அரசு 2008இல் வெளியிட்டது.அக்டோபர் 4, 1904 - திருப்பூர் குமரன் பிறந்த நாள்இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 'கொடிகாத்த குமரன்' என்று அழைக்கப்படுகிறார். திருப்பூரில் இவரது நினைவகம் உள்ளது. இவரது நினைவு அஞ்சல் தலையை இந்திய அரசு 2004இல் வெளியிட்டது.அக்டோபர் 4, 1931 - உலக விலங்குகள் நாள்விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம். இத்தாலி நாட்டு வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அக்டோபர் 4, 1884 - சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்சுதந்திரப் போராட்ட வீரர், ஆன்மிகவாதி. தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்திச் சிறை சென்றார். பாரதியாருடன் சேர்ந்து மேடைகளில் விடுதலைப் போராட்ட முழக்கமிட்டார். அக்டோபர் 7, 1978 - ஜாகீர் கான் பிறந்த நாள்இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். 2011, உலகக் கோப்பைத் தொடரில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றுள்ளார்.