உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

அக்டோபர் 21, 1992 - உலக அயோடின் பற்றாக்குறை நாள்அயோடின் சத்து மனித உடல் வளர்ச்சிக்குத் தேவை. அயோடின் குறைபாடு உலகம் முழுவதும் உள்ளது. அதன் பற்றாக்குறை குறித்தும், விளைவுகள் பற்றியும் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கம்.அக்டோபர் 21, 1833 - ஆல்ஃபிரட் நோபல் பிறந்த நாள்அறிவியலாளர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபலை உருவாக்கினார். இவர் நினைவாக ஒரு தனிமத்துக்கு 'நோபலியம்' என பெயரிடப்பட்டுள்ளது. அக்டோபர் 24, 1948 - ஐக்கிய நாடுகள் சபை நாள்உலகின் மிக உயர்ந்த அமைப்பு. எதைப் பற்றியும் விவாதம் செய்யவும், சமாதானம், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் உரிமைகளைக் கொண்டுள்ளது. இதன் சாதனைகளை எடுத்துக்கூறுவது இந்த நாளின் நோக்கம்.அக்டோபர் 24, 1921 - ஆர்.கே.லஷ்மண் பிறந்த நாள்'திருவாளர் பொதுஜனம்' (The Comman Man)R என்கிற கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தை வரைந்து புகழ்பெற்ற இந்திய ஓவியர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் இளைய சகோதரர். பத்மவிபூஷண், உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அக்டோபர் 25, 1881 - பாப்லோ பிகாசோ பிறந்த நாள்ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என, பன்முகத் திறமை கொண்டவர். அமைதிச் சின்னமாக புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்!அக்டோபர் 27, 1920 - கே.ஆர்.நாராயணன் பிறந்த நாள்கல்லூரி விரிவுரையாளர். லண்டனில் பத்திரிகையாளராக இருந்தபோது, பிரதமர் நேருவின் கோரிக்கையை ஏற்று, இந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார். துணை ஜனாதிபதியாக இருந்து, இந்தியாவின் 10வது ஜனாதிபதி (1997 - 2002) ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !