தேதி சொல்லும் சேதி!
நவம்பர் 26, 2001 - உலக உடல் பருமன் எதிர்ப்பு நாள்அதிக அளவு கொழுப்பு நமது திசுக்களில் சேர்வதே உடல் பருமன். இது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமனால் ஏற்படும் தீமைகளை விளக்க, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.நவம்பர் 26, 2015 - அரசியல் சாசன தினம்இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்த, அம்பேத்கரை கௌரவிக்கவும், அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் பிரதமர் மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.நவம்பர் 27, 1986 - சுரேஷ் ரெய்னா பிறந்த நாள்இந்திய கிரிக்கெட் வீரர். 2010, இலங்கைக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தார். “உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் மிக முக்கியமானவர்!” என, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் இவரைப் பாராட்டியிருக்கிறார்.நவம்பர் 28, 1820 - ஃபிரெடரிக் ஏங்கல்ஸ் பிறந்த நாள்ஜெர்மன் அரசியல் தத்துவஞானி, பத்திரிகையாளர். மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச கொள்கைகளை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் எழுதினார். முதலாளித்துவ பொருளாதாரம் பற்றி கருத்துகள் கூறியிருக்கிறார்.நவம்பர் 30, 1858 - ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி. 'தாவரங்களுக்கும் உயிர் உண்டு' என்று சொன்ன அறிவியல் ஆராய்ச்சியாளர். பிரிட்டிஷ் அரசாங்கம் 'சர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.நவம்பர் 30, 1874 - வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நாள்முன்னாள் பிரதமர். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்தார். புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.