ஜொலிக்கும் தடகள நட்சத்திரங்கள்!
23வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நான்கு நாட்கள் (2019, ஏப்ரல் 21 - 24) நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 43 நாடுகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் 4வது இடம்பிடித்தது. அவற்றுள் நமது தமிழகத்தில் இருந்து இருவரும், கேரளத்தில் இருந்து ஒருவரும் பதக்கம் வென்றுள்ளனர். கோமதி மாரிமுத்துவயது: 30ஊர்: திருச்சி, தமிழ்நாடு.சாதனை: 800 மீட்டர் ஓட்டம், 2.02.70 நிமிடங்கள்பதக்கம்: தங்கம்தோஹா ஆசிய தடகளப் போட்டித் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவரே! ஏற்கெனவே, தேசிய சாதனைக்கும் சொந்தக்காரர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கோமதியின் விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் பரிசாக தற்போது தங்கம் கிடைத்துள்ளது. பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கோமதி 'தங்கம் வெல்வது வாழ்நாள் கனவாக இருந்தது' என்று மகிழ்ச்சியோடு பேசினார்.பி.யூ. சித்ராவயது: 23ஊர்: பாலக்காடு, கேரளம்சாதனை: 1,500 மீட்டர் ஓட்டம், 4.14.56 நிமிடங்கள்பதக்கம்: தங்கம்இவர் ஏற்கெனவே, 2017ஆம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றவர். ஆனாலும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. தற்போது அந்தச் சிக்கல் இன்றி நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சித்ரா, கடினமான சூழ்நிலையிலும் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டார். 'பந்தயக் கோட்டை நெருங்கும் நேரம் வரை எனக்குப் பதற்றம் இருந்தது. அதனால் விடாமுயற்சியோடு ஓடி வெற்றிக் கோட்டை முதலாவதாக அடைந்தேன்' என உற்சாகமாகக் கூறினார்.ஆரோக்ய ராஜீவ்வயது: 27ஊர்: திருச்சி, தமிழ்நாடுசாதனை: 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்பதக்கம்: வெள்ளிவறிய குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவுக்கு, தொடக்க கால பயிற்சியின்போது ஊட்டச்சத்தாக இருந்தது பள்ளிக்கூட சத்துணவுதான்! கல்லூரி முடித்து இராணுவத்தில் சேர்ந்த பிறகே பட்டை தீட்டிய வைரம் ஆனார். 2018ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் வெள்ளி வென்றுள்ள ராஜீவ், 'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம்' என்கிறார்.