திறன் உலா: கண்டுபிடியுங்கள்
வயர்லெஸ் செல்லுலார் தொழில்நுட்பம் (Wireless Cellular Technology) என்பது கம்பி (wire) இல்லாமல் தகவல் பரிமாற்றம் செய்யும் தொலைதொடர்பு தொழில்நுட்பமாகும். இது மொபைல் போன்கள், டேப்லெட்கள் மற்றும் வயர்லெஸ் இணையம் போன்ற சேவைகளின் அடிப்படை அம்சமாகச் செயல்படுகிறது. செல்லுலார் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய தரநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் வேகமும் திறனும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கீழே செல்லுலார் தொழில்நுட்பத்தின் தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை முதன்முதலில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.1. அனலாக் அடிப்படையிலான குரல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்பட்ட முதல் தலைமுறை - ___________ ?2. SMS மற்றும் MMS போன்றவை இணைக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை ___________ ?3. அதிவேக இணையம், வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கிய மூன்றாம் தலைமுறை ___________ ?4. அதிவேக டேட்டா பரிமாற்றம் (LTE), HD வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் சேவைகள் இணைக்கப்பட்ட நான்காம் தலைமுறை - ___________ ?5. மிகவேக இணையம், IoT இணைப்பு, குறைந்த தாமதம்(Low Latency) சேவைகள் இணைக்கப்பட்டு, இன்று பயன்பாட்டில் உள்ள ஐந்தாம் தலைமுறை - ___________ ?விடைகள்:1. 1979 ஆம் ஆண்டு (ஜப்பான்)2. 1991 ஆம் ஆண்டு (பின்லாந்து)3. 2001 ஆம் ஆண்டு (ஜப்பான்)4. 2009 ஆம் ஆண்டு (நார்வே)5. 2019 ஆம் ஆண்டு (தென் கொரியா)