உள்ளூர் செய்திகள்

ஸ்மைலி போலச் சிரிப்போம்!

உலக புன்னகை தினம்! அக்டோபர் 4கலர் பென்சில்களை எடுத்துக்கொண்டு வரையத் தயாராகுங்கள். பிரகாசமான சூரிய மஞ்சள் நிறத்தில் ஒரு வட்டமான முகம், மேல்பகுதியில் கண்கள் போல குறுகிய நீள்வட்டங்கள் இரண்டு, டாவின்ஸி ஓவியத்தில் இருக்கும் மோனாலிசா வாய் போல சற்று நீண்ட வாய். இப்போது அந்தப் படம் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறதா?! நீங்கள் வரைந்த படத்தின் பெயர் 'புன்னகை முகம்'! (Smiley Face)மேக்கப் இல்லாமலே நம் முகத்தை வசீகரமாக மாற்றக்கூடிய சக்தி, இந்தப் புன்னகைக்கு இருக்கிறது. ஒரு சிறு புன்னகை போதும், எதிரிகளையும் நண்பராக்கலாம்! புன்னகை முகத்தைப் பார்க்கும்போது, நமக்கும் புன்னகைக்கத் தோன்றும். வீடாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மெல்லிய புன்னகை ஒன்றைப் பூத்திடுங்கள். புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு 'வணக்கம்' சொல்லி கை குலுக்கி நம் பெயருடன் அறிமுகம் ஆகிறோம். இதனுடன் புன்சிரிப்பையும் வெளிப்படுத்தினால், அந்தச் சந்திப்பு நம்மால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.நமது முகத்தை எப்போதும் ஆங்ரி பேர்டு மாதிரி கோபமாக வைக்காமல் சந்தோஷமாக வைக்க வேண்டும். எந்த நேரமும் புன்னகைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், தேவையான சந்தர்ப்பங்களில் புன்னகைக்க வேண்டும். புன்னகை என்பது அன்பின் வெளிப்பாடு! இது மனிதனை, புத்துணர்ச்சிவுடன் வைத்திருக்க உதவுகிறது. * ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963ல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். * உலக புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பின்னர் இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !