உள்ளூர் செய்திகள்

வேகம், துல்லியம், மலிங்கா!

லசித் மலிங்கா (Lasith Malinga)பிறந்த தேதி: 28.8.1983இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். கொழும்பில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி, அவரது கடைசிப் போட்டியாக அமைந்தது. இதில் சிறப்பாக ஆடிய மலிங்கா, 9.4 ஓவர்கள் வீசி, இரண்டு மெய்டன் ஓவர்களுடன், 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மலிங்காவை வெற்றியோடு அனுப்பி வைத்தது இலங்கை அணி.ஒரு நாள் போட்டிகள்: 226 விக்கெட்டுகள்: 338 ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை (337 விக்கெட்கள்) முந்தி, ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வுபெறுகிறாரே தவிர, டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !