வால் முளைத்த சிலந்தி
10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிலந்தி வகையைச் சேர்ந்த உயிரினத்தின் புதைபடிவம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மர இடுக்கில் பிசினில் சிக்கியிருந்த இந்த உயிரினம், சிலந்தி இனத்தைச் சேர்ந்தது என்றாலும் இதற்கு வால் உள்ளது. கான்சஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புதைபடிவ ஆய்வு வல்லுனராகிய டாக்டர் பால் செல்டன் இவ்வுயிரினத்தின் வால் சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்வதற்காகப் பயன்பட்டிருக்கலாம் என்றும், மியான்மர் பகுதியில் இந்த உயிரினம் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறார்.கிரேக்க புராணங்களில் வரும் கிமேரா எனும் உயிரினத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிலந்திக்கு கிமேரார்சினே இங்கி (Chimerarachne yingi) என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.