உள்ளூர் செய்திகள்

கதை சொல்லும் சுவர்

பார்க்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு, கதை கேட்கும் அனுபவத்தை ருசிகரமாக மாற்ற முடிவு செய்த சில மாணவர்கள், 'கதை சொல்லும் சுவர்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் உள்ள சாய் சர்வதேசப் பள்ளி மாணவர்கள், ஒடிசா பார்வையற்றோர் சங்கப் பள்ளியில் பயின்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ள இந்தப் புதுமையான திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேஹாக் தவான் எனும் பதினோராம் வகுப்பு மாணவி, வகுப்புத் தோழர்கள் 11 பேருடன் சேர்ந்து ஆரம்பித்த இத்திட்டத்தில், இங்கிலாந்திலுள்ள விண்டர்போர்ன் பள்ளி (Winterbourne International Academy, -Bristol) மாணவர்களும் ஸ்கைப் மூலம் உதவினர். முதலில் கதைகளைப் படித்து, அதைப் பதிவு செய்து ஓர் ஒலிவடிவ நூலகத்தைத் தொடங்குவதாகவே இவர்களின் திட்டம் இருந்தது. பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து, ஒரு கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை சுவரில் தொட்டு உணரும் வகையில் வடிவமைத்துள்ளனர் இச்சிறுவர்கள். சுவரில் உள்ள ஒலிபெருக்கியின் மூலமும் இக்கதை ஒரிய மொழியில் ஒலிபரப்பப்படுகிறது. எனவே தொடுதல், கேட்டல் எனும் இரு புலன்களாலும், இக்கதையை பார்வையற்ற மாணவர்கள் ரசித்து மகிழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !