உள்ளூர் செய்திகள்

ஹெல்மட் அணியாதவர்களுக்கு மாணவியர் ரோஜாப்பூ பரிசு

கர்நாடகத்தில், ஹெல்மட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பள்ளி மாணவியர் ரோஜாப்பூ கொடுத்தனர். கர்நாடக மாநிலம் குல்பர்காவில், ஹெல்மட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவியர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகளை வழிமறித்த மாணவியர், ரோஜாப்பூவை நீட்டி, 'உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது. எனவே, ஹெல்மட் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறினர். பள்ளி மாணவியரின் முயற்சிக்கு போக்குவரத்து காவலர்கள் உதவியாக இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !