கோடை விடுமுறை: இதுதான் என் திட்டம்
இன்னும் சில நாட்களில் விட்டாச்சு லீவு என்று ஏக சந்தோஷத்தை அனுபவிக்கவிருக்கின்றனர் மாணவர்கள். விடுமுறையில் நம் மாணவ, மாணவியர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிய கோடைவிடுமுறை: உங்கள் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தோம். உளுந்தூர்பேட்டை, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலம் மெட்ரிக். மே.நி. பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ: தேஜாஸ்ரீ, 8ஆம் வகுப்புஇந்தக் கோடை விடுமுறைக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக வீட்டில் சொல்லி இருக்காங்க. குடும்பத்தோட நல்லா ஜாலியா ஊர் ஊராக, கோவில் கோவிலாக பார்க்கப் போறேன். சான்ஸ் கிடைக்கும் இடங்களில் எல்லாம் போட்டோ எடுப்பேன். சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியதும் அந்த போட்டோக்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். அடுத்த கோடை விடுமுறை வரைக்கும் அந்த போட்டோக்கள்தான் எனக்கு உற்சாக டானிக்.ஹரிதா, 9ஆம் வகுப்புகிராமத்தில் இருக்கும் எங்கள் தாத்தா பாட்டி வீட்டிற்குப் போவோம். இந்த சமயத்தில்தான் அங்கே கோவில் திருவிழா நடக்கும். அங்கே நடக்கும் தேர்த் திருவிழாவின் போது எல்லா மக்களும் ஒன்றுகூடி தேர் இழுப்போம். திருவிழாவை ஒட்டி, சின்னச்சின்ன கடைகள், ராட்டினம், கச்சேரி, நாடகம் எல்லாம் நடக்கும். பார்க்கவே சூப்பரா கலர்ஃபுல்லாக இருக்கும். செம ஜாலியான லீவ் சீசன் இது.ஸ்ருதி, 8ஆம் வகுப்புபுக் ஃபெஸ்டிவலில் வாங்கி வைத்த புக்ஸையெல்லாம் படிக்க, இந்த சம்மர் லீவைப் பயன்படுத்தப் போறேன். பாதி படிச்சுட்டு வெச்சிருக்கிற 'பொன்னியின் செல்வன்' நாவலின் முதல் பாகத்தை முடிக்க ட்ரை பண்ணுவேன். முடிந்தால் இந்த விடுமுறையில் அதன் ஐந்து பாகங்களையும் படிச்சு முடிச்சிடணும்னு நினைச்சிருக்கேன்.தரணி குமார்,9ஆம் வகுப்புஇந்த ஆண்டு சரியாக மழை இல்லை. அதனால் கோடை கடுமையாக இருக்கும் என்கிறார்கள். நமக்கே திண்டாட்டம்னா, பறவைகள் எல்லாம் பாவம்ல? அதனால, இந்தக் கோடையில் டெய்லி எங்க வீட்டு மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கணும்னு பிளான் பண்ணியிருக்கேன். மோகன ராம், 8ஆம் வகுப்புஉடலுக்கு நன்மை செய்யக்கூடிய சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளை மட்டும்தான் இந்த சம்மர் லீவுல சாப்பிடப் போறேன். இது பழகிடுச்சுன்னா சிறுதானியங்களை அப்படியே தொடர்வேன். நான் சமைக்கவும் கற்றுக்கொள்வேன். கத்துக்கிட்டதை என் நண்பர்களுக்கும் சொல்லித் தருவேன். அப்புறம் வழக்கம் போல விளையாட்டுத்தான்.மதன், 8ஆம் வகுப்புஇந்த முறை தென் தமிழகம் சுற்றுலா போக பிளான் பண்ணியிருக்கோம். மதுரை, குற்றாலம், இராமேஸ்வரம் எல்லாம் போகப்போறேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, அவங்க குடும்பம்னு எல்லா குடும்ப உறவுகளும் சேர்ந்து சுற்றுலா போறோம். இந்த ஜாலி சுற்றுலா நம்ம ஹிஸ்டரிய தெரிஞ்சுக்க உதவும். ஊர் திரும்பினதும் சுற்றுலாவில் பார்த்த விஷயங்களை கட்டுரையாக எழுதுவேன்.