கணக்கும் இனிக்கும் - எது அதிகம்?
இங்குள்ள படத்தில் இரு நிறங்கள் உள்ளன. நிறங்கள் நிறைந்திருக்கும் பரப்பளவைக் கண்டுபிடித்து, எந்த நிறம் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். சிவப்பா? மஞ்சளா?சூத்திரம்: வட்டத்தின் பரப்பளவு = π x r2 ச.அ.சதுரத்தின் பரப்பளவு = a2 ச.அ.விடை: சிவப்புமுதலில், படத்தின் மொத்தப் பரப்பளவைக் காண்போம். அது சதுர வடிவில் உள்ளது. சதுரத்தின் ஆரம், a=9 செ.மீ.ஆக, சதுரத்தின் பரப்பளவு = 92 = 9 x9 = 81 ச.அ.அடுத்து, சிவப்பு நிறத்திலுள்ள அரை வட்டங்களை முழு வட்டங்களாக மாற்றி கருதலாம்.எனில், பெரிய வட்டத்தின் ஆரம், R=3 செ.மீ. மற்றும் சிறிய வட்டத்தின் ஆரம், r=2 செ.மீ. என, படத்தின் மூலம் அறியலாம்.ஆக, பெரிய வட்டத்தின் பரப்பளவு, C1 = π x 32 = 3.14 x 9 = 28.26 ச.அ.சிறிய வட்டத்தின் பரப்பளவு, C2 = π x 22 = 3.14 x 4 = 12.56 ச.அ.ஆக, சிவப்பு நிறமுள்ள பகுதியின் பரப்பளவு = C1+C2 = 28.26 + 12.56 = 40.82 ச.அ.மஞ்சள் நிறமுள்ள பகுதியின் பரப்பளவு = மொத்தப் பரப்பளவு -- சிவப்பு நிறமுள்ள பகுதியின் பரப்பளவு = 81 - 40.82 =40.18 ச.அ.எனவே, சிவப்பு நிறமே அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது.