பெண்களால் பெண்களுக்கான முதல் விடுதி
நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்காகப் பெண்களால் இயக்கப்படும் விடுதி திருவனந்தபுரத்தில் திறக்கப்படவுள்ளது. கேரள சுற்றுலா வளர்ச்சித்துறையும், கேரள போக்குவரத்துத்துறையும் இணைந்து இதற்கான பணிகளைத்தொடங்கி உள்ளன. 'ஹோட்டல்ஸ்' என பெயரிடப்பட்ட இத்திட்டத்திற்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த வியாழனன்று திருவனந்தபுரம் தம்பானூரில் நடைபெற்றது. இந்த ஹோட்டல்ஸில் எல்லா நிர்வாகப் பொறுப்புகளையும் பெண்களே மேற்கொள்வர். பெண்கள் மட்டுமே தங்க முடியும். 'பணி நிமித்தமாக மாநிலத் தலைநகருக்கு வரும் பெண் அதிகாரிகள், ஆய்வாளர்கள், விளையாட்டு வீரர்கள், இளம்பெண்கள், வணிகப் பெண்கள் மற்றும் சுற்றுலா வரும் பெண்கள் குழுவினர் போன்றவர்களுக்கு பாதுகாப்புமிக்க இடமாக இது இருக்கும். இன்னும் 6 மாதங்களில் இது செயற்படும்' என்று கேரள சுற்றுலா வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.