உள்ளூர் செய்திகள்

செல்லப்பிராணியால் எரிந்து போன வீடு

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஆமை செய்த காரியத்தால், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ பகுதியில், செல்லப்பிராணியாக ஆமையை ஒருவர் வளர்த்து வந்தார். அவருடைய பக்கத்து வீட்டில், தத்தெடுக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுடன் வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆமை தனது கூண்டில் வைக்கப்பட்டிருந்த விளக்கை, தட்டிவிட்டது. இதையடுத்து, பக்கத்து வீடுகளுக்கும் மளமளவென தீ பரவியது. இதில், ஆமை தப்பித்து விட்டாலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வீடு எரிந்து சாம்பலாயின. இதையடுத்து, அந்த ஆமை மற்றும் அதன் உரிமையாளர் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !