உள்ளூர் செய்திகள்

மணல் செய்யும் மாயம்

மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற்குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் (Desert - டெசர்ட்) எனப்படும். உலகின் மொத்தப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதி. இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படும். இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. பாலைவனங்கள் ஆண்டுக்கு 250 மி.மீ.-க்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி வளரும் கள்ளி, பனை போன்ற சில தாவரங்கள் மட்டுமே இங்கு வளர்கின்றன. கங்காரு, எலி, ஆமை, சில வகைப் பாம்பு, பல்லிகள், ஒட்டகங்கள் போன்றவை பாலைவனச்சூழலைச் சமாளித்து உயிர்வாழும் உயிரினங்கள்.பாலைவன வகைகள்மழைபெறாத பாலைவனம் (Rain Shadow Desert)மலைசார்ந்த பாலைவனம் (Montane Desert)குளிர் பாலைவனம் (Cold Desert)பந்தா… தாவரமா!'பேஸ்பால்' கள்ளி (Baseball Cactus) - அறிவியல் பெயர்: 'இயூபோர்பியா ஒபிஸா' (Euphorbia obese).தென்னாப்பிரிக்காவின் காரூ (Karoo) பாலைவனப் பகுதியில் மட்டும் காணப்படும் இந்தக் கள்ளி ஒரு பூக்கும் தாவரம். பார்ப்பதற்கு 'பேஸ்பால்' விளையாட்டுப் பந்து போலவே இருக்கும். பச்சை நிறத்தில், சுமார் 15 செ.மீ. அளவுக்கு வட்டமான வடிவில் வளரும். நீண்ட நாட்களுக்குத் தேவையான நீரை, உட்பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும். இதன் பூக்கள் 'சியாதியா' (Cyathia) எனப்படும்.பொருத்துக1. வெப்பப் பாலைவனம் அ. இந்தியா2. உலகின் மிகப்பெரிய குளிர் பாலைவனம் ஆ. லடாக்3. தார் பாலைவனம் இ. அண்டார்டிகா4. பாலைவனக் கப்பல் ஈ. சஹாரா5. குளிர் பாலைவனம் உ. ஒட்டகம்விடைகள்: 1 - ஈ, 2 - இ, 3 - அ, 4 - உ, 5 -- ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !