உள்ளூர் செய்திகள்

புதிய தலைவர் பிரசாத்

இந்திய கிரிக்கெட் போர்டால், கடந்த 2012ல் நியமிக்கப்பட்ட சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிந்தது. ஐந்து பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவின் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத், நியமிக்கப்பட்டார். இவர், இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சரண்தீப் சிங், ஜாடின் பரஞ்பே, தேவாங் காந்தி, ககன் கோடா ஆகியோர் உறுப்பினர்களாகத் தேர்வாகினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !