உள்ளூர் செய்திகள்

மன அழுத்தத்தைக் குறைத்த கிளி!

வெளிநாட்டுப் பறவைகள் மீது இந்தியர்களுக்கு பெரும் ஈர்ப்பு உண்டு. தற்போது பல்வேறு நகரங்களில் வெளிநாட்டுக் கிளிகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். சென்னையில் மட்டும்தான் விநோதப் பறவைகள் வளர்ப்பவர்கள் உண்டா? எங்க ஊரில் நானும் வளர்க்கிறேன் என்று பேசத் தொடங்கினார் சிவகாசியைச் சேர்ந்த சுருதி. பத்தாம் வகுப்பு தேர்வு அழுத்தமே பாதிக்காததற்கு கிளிதான் காரணம் என்றார். ஆப்பிரிக்கன் சாம்பல் கிளி, மக்காவ்ன்னு சில வெளிநாட்டு கிளிகள் தெரியும். உங்களோட கிளி பார்க்கவே ரொம்ப புதுசா இருக்கே? இதோட பேரு யெல்லோ பேக் சாட்டரிங் லோரி (yellow back chattering lory). இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த கிளி இது. ரொம்ப ரொம்ப சமத்து. நம்மோட பழகி பிடிச்சிருச்சுன்னா, நம்ம கையைவிட்டு எங்கும் போக மாட்டான் தெரியுமா?அட! அப்படியா, வெளியே கூட்டிட்டு போவீங்களா?ஆமா! நாங்க இரண்டுபேரும் வெளியே போவோம். அமைதியா வான்னு சொன்னா, வார்த்தையை மீற மாட்டான். என்னோட கையில், தோளில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டே வருவான். நாங்க சென்னைக்கும் வந்திருக்கோம். சரி, அது ஏன் கிளி வாங்க ஆசை வந்துச்சு?எங்க வீட்டுல நாய்கள் இருக்கு. சின்ன வயசிலிருந்து பறவைகள்னா, கொத்திடும்னு பயந்துட்டு இருந்தேன். முக்கியமா கிளிகள்னா ரொம்ப பயம். கிளிகளை நல்லா பழக்கப்படுத்தி கொடுக்கும் இடங்கள் இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதைப்பத்தி நெட்டுல படிச்சேன். அதற்கப்புறமா, அம்மா, அப்பாகிட்ட இதை வாங்கித் தரக் கேட்டேன்.உங்க வீட்டுல உடனே சரின்னு சொல்லிட்டாங்களா?உடனே எப்படி ஓகே சொல்லுவாங்க. நிறைய நாள் கெஞ்சி, கவனமா பார்த்துப்பேன்னு சத்தியம் செஞ்சு வாங்கி இருக்கேன். முதல்ல அம்மா, இது எல்லாம் தேவையில்லாததுன்னு சொன்னாங்க. ஆனா, இப்போ அவங்கதான் இதோட பெஸ்ட் ப்ரெண்ட்னு சொல்லலாம்.பத்தாவது தேர்வுக்கு படிச்சிட்டிருப்பீங்க. கிளி வளர்க்க நேரம் கிடைச்சுதா?ஸ்கூல், டியூஷன்னு எப்ப பார்த்தாலும் படிப்பு. எனக்கு இதுவே ஒரு பெரிய மன அழுத்தமாக இருந்துச்சு. கிளி வந்ததும், என்னோட மொத்த அழுத்தமும் போயே போச்சு. எந்த வம்பும் செய்யாம, படிப்பு, கிளியோட விளையாட்டுன்னு பாதை மாறிச்சு.உங்க கிளிக்கு என்ன உணவு கொடுக்கிறீங்க?இவனுக்கு இன்னும் ஒரு வயதுகூட ஆகல. மாதுளை, கொய்யா, ஃப்ளேக்ஸ், செரலாக் சாப்பிடக் கொடுக்கிறோம். அதோடு கிளிக்கான விளையாட்டுப் பொருட்களை வெச்சிருக்கிறதால, அதோட விளையாடிக்கிட்டு இருப்பான். கிளி வந்ததில் உங்ககிட்ட ஏதாச்சும் மாற்றம் வந்ததா?காலையில சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் வந்துச்சு. முதலில் வீட்டு வேலைகளைச் செய்ய மாட்டேன். ஆனா இப்ப பொறுப்பா கிளியையும் பார்த்துக்கிட்டு வீட்டு வேலையும் செய்றேன். கிளியை வளர்க்கிறேன்னு பல நண்பர்களுக்குத் தெரியும். அதனால, கிளியைப் பார்க்க வீட்டுக்கு நிறையபேர் வருவாங்க. இதனால், என் நண்பர்கள் வட்டமும் அதிகமாகி இருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !