படங்கள் சொல்லும் கதை
பக்கம் பக்கமாய் படிக்கும் அனுபவத்தை, சில நேரம் 'சிங்கிள்' புகைப்படம் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அப்படி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை காந்திஜியின் புகைப்படங்கள். அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை படிப்பது போன்ற அனுபவத்தை தருகின்றன படங்கள் ஒவ்வொன்றும்.நம் தேசத் தந்தை காந்தியைப் பற்றி நாம் மட்டும் அறிந்தால் போதுமா? உலக நாடுகள் அனைத்தும் அறிய வேண்டாமா? அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது கூகுள். காந்தி எழுதிய நூல்கள், கருத்துகள், எழுத்துகள், போராட்டங்கள் அனைத்தையும் இணையத்தில் படிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. www.mkgandhi.org என்ற இணைய பகுதியில் அவரைப்பற்றிய முழு விவரங்களும் அடங்கி இருக்கின்றன.காந்தியின் 1869-1914 , 1915-1932, 1933-1948 என அவர் இறக்கும் வரையிலான புகைப்படங்களை மூன்று காலக்கட்டங்களாகப் பிரித்து பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி பற்றிய வீடியோ காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன.