உள்ளூர் செய்திகள்

மீண்டும் நீராவியில் ஓடும் ரயில்

இங்கிலாந்தில் நீராவி மூலம் இயக்கப்படும் ரயில்கள், 1968ம் ஆண்டு முதல் முக்கிய தடங்களில் இயக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் முடிந்த நிலையில் டொர்னாடோ (Tornado) எனப்படும் நீராவி ரயில், சமீபத்தில் ஆப்பிள்பை (Appleby) மற்றும் ஸ்கிப்டன் (Skipton) ஆகிய ஊர்களுக்கு இடையே ஓட்டப்பட்டது. மொத்தம் எட்டுப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் பயணத்தில், வயதானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பயணம் செய்தனர். நீராவி ரயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் ஆப்பிள்பை - ஸ்கிப்டன் வழித்தடத்தில், கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப் படவில்லை. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருப்பதால், இன்னும் இரண்டு முறை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !